நீட் மறுத்தேர்வு! தமிழகத்தில் முதலிடம்! தேசிய அளவில் 12வது இடம்! யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் மறுத்தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர், அகில இந்திய அளவில் 12 ஆவது இடத்தை பிடித்து சாதனை படித்துள்ளார். இவர் 705 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவு தேர்வு (NEET) அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடந்தது.

education

இதில் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து மே 3 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்தன.

இந்த முறையும் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் மறுத்தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 551 நகரங்களில் 5,440 மையங்களி, 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதியிருந்தனர். இந்த மறுத்தேர்வு மே 3 ஆம் தேதி நடந்த தேர்வை காட்டிலும் நீட் மறுத்தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது. அதில் 720-க்கு 715 மதிப்பெண்களை பெற்று பஞ்சாப் மாணவர் ஆர்யன் குப்தா, ஹரியானா மாணவர் பன்சுல் பன்சால் ஆகிய இருவர் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

அதன் பிறகு ராஜஸ்தானை சேர்ந்த உப்லக்ஷ்யா கோயல் , பீகாரை சேர்ந்த ஆயுஷ் பலோடியா, மகாராஷ்டிராவை சேர்ந்த குடலே ஷ்ரவாணி கிருஷ்ணா, பீகாரை சேர்ந்த ரியா ரஞ்சந், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்யன் துபே, பஞ்சாப்பை சேர்ந்த கீதான்ஷ் சரின், ராஜஸ்தானை சேர்ந்த கவுரவ் சிங், மகாராஷ்டிரா மோகனிஷ் மாருதி போன்ஸ்லே, ராஜஸ்தானை சேர்ந்த அபிலாஷ் உள்ளிட்டோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

மொத்தம் 138 மாணவர்கள், 720 மதிப்பெண் முதல் 690 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் 58 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வில் 19 மாணவர்கள் 700 மதிப்பெண்களையும் 1492 மாணவர்கள் 650 மதிப்பெண்களுக்கு மேல், 10160 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு மேல், 90,780 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். தேர்வில் முதல் 17 பேர் 705-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றனர்.

தமிழகத்தை பொருத்தமட்டில் சென்னையை சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் முதல் மதிப்பெண்ணை பிடித்து தேசிய அளவில் 12 ஆவது இடத்தை பெற்றுள்ளார். இவர் 705 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார். அதாவது 99.99915 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் வெங்கடபதியை தவிர, 12 மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். அவர் 690 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். ஸ்ரீனிகா (AIR 27), சுடர் (AIR- 45), வனிஷா சதீஷ் (AIR-51), சபரி (AIR- 59), ஜெய்கிருஷ்ணா (AIR- 75), சம்விதா (AIR- 82), நவிதனா (AIR- 88), நிகில் சிவநாதன் (AIR-92), ஜனனி ஸ்வேதா (AIR- 112), ரோஹித் மேத்யூ ரவீந்திரராஜன் (AIR- 115), ஜெயகிருஷ்ணா (AIR- 134) ஆகிய 12 மாணவர்கள் அகில இந்திய அளவில் சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

தமிழகத்தை பொருத்தமட்டில் 307 மையங்களில் நடந்த நீட் மறுத்தேர்வை 1.42 லட்சம் பேர் எழுதியிருந்தனர். மே 3 ஆம் தேதி தமிழகத்தில் 95 சதவீத மாணவர்கள் நீட் தேர்வு எழுதியிருந்தனர். ஆனால் நீட் மறுத்தேர்வில் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாக குறைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+