ஜனவரி-3ல் அதிமுக செயற்குழு கூட்டம்- ஜெ. அறிவிப்பு
சென்னை: அதிமுக செயற்குழுக் கூட்டம் ஜனவரி 3ம் தேதி நடக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக செயற்குழுக் கூட்டம், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில், ஜனவரி 3ம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறும்.
கூட்டத்திற்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குவார்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியாக அழைப்புகள் அனுப்பப்படும். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது அழைப்புக் கடிதத்துடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
முக்கிய அறிவிப்பு:
ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் யார் என்பதில் தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர் இளவரசிக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருகிறது.
இந்தப் பனிப்போரில் சிக்கி சசிகலா ஆதரவாளர்கள் பலரது தலைகள் உருண்டு வருகின்றன. குறிப்பாக நடராஜனுக்கு ஆதரவாக இருப்போரை கட்சியிலிருந்து தூக்கி வருகிறார் ஜெயலலிதா.
இதவரை இருந்து வந்த சசிகலாவின் ஆதிக்கம் மெல்ல மெல்ல தகர்ந்து வரும் நிலையில், புதிய சக்தியாக இளவரசி உருவெடுத்து வரும் பின்னணியில் அதிமுக செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதில் இளவரசிக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும் திமுகவின் அடுத்த வாரிசாக நெல்லையில் வைத்து முடி சூட்டப்பட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். மறுபக்கம் விஜயகாந்த் பின்னால் பெரும் திரளான இளைஞர்களும், எம்.ஜி.ஆர். விசுவாசிகளும் போய்க் கொண்டுள்ளனர். சரத்குமார் பின்னால் தென் மாவட்டங்களில் நாடார் சமூக மக்கள் திரண்டு வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் அதிமுகவை பலப்படுத்தும் நோக்கிலும், லோக்சபாவுக்கு திடீர் தேர்தல் வந்தால் தயாராகும் வகையிலும் பல புதிய திட்டங்களை இந்த செயற்குழுக் கூட்டத்தில் ஜெயலலிதா அறிவிக்கக் கூடும். பல முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications