நீதிமன்றத்துக்கு வந்த முதியவர் அவமானம் தாங்காமல் சாவு
சங்கரன்கோவில்: முதன்முதலாக நீதிமன்றத்துக்கு வந்த 92 வயது முதியவர் அவமானத்தால் தாங்காமல் இறந்து விட்டார்.
திருவேங்கடம் அருகே உள்ள அய்யநேரியை சேர்ந்தவர் கரியமால் மகன் வெங்கட் ராமானுஜத்துக்கும், திருவேங்கடம் அருகே செவல்குளத்தை சேர்ந்த சன்னாசி மகள் சீதாலட்சுமிக்கும் 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
வெங்கட் ராமானுஜம் ஓசூரில் டீக்கடை நடத்தி வருகிறார். அவரின் தந்தை கரியமால் நிலக்கிழாராக இருக்கிறார்.
வெங்கட் ராமானுஜம்-சீதாலட்சுமி தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். பின்னர் மனைவியுடன் தன்னை சேர்ந்து வைக்க கோரி வெங்கட்ராமனுஜம் சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் சேர்ந்து வாழ கூறி தீப்பளித்தார். ஆனால் இருவரும் சேர்ந்து வாழாமல் பிரிந்தே இருந்தனர்.
இந்நிலையில் கணவர் வெங்கட் ராமனுஜம், மாமனார் கரியமால் மற்றும் கணவரது சகோதர, சகோதரிகள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக திருவேங்கடம் போலீசில் சீதாலட்சுமிபுகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.
தங்கள் மீது வரதட்சணை புகார் கொடுத்ததை அறிந்த ராமானுஜம், சீதாலெட்சுமியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு பதிலடியாக சீதாலெட்சுமி தனது கணவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து விட்டதாகவும், தனது மகளுக்கு ஜீவனாம்சம் கேட்டு சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக கரியமால், வெங்கட்ராமனுஜம், சகோதர, சகோதரிகள் உள்பட 8 பேர் ஒரு காரில் நீதிமன்றத்துக்கு வந்தனர். காரை விட்டு இறங்க முடியாக அளவுக்கு முதுமையால் தள்ளாடிய கரியமாலை நீதிமன்றத்தில் இருந்து பார்த்த மாஜிஸ்திரேட் பார்த்தசாரதி அவர் இறங்க வேண்டாம் என்றும் வழக்கிற்கு வாய்தா அளிப்பதாகவும், அடுத்த வாய்தாவிற்கு கூட கரியமால் ஆஜாராக தேவையில்லை என்றும் கூறினார்.
இதையடுத்து அனைவரும் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் புறப்பட்ட 15 நிமிடத்தில் கரியமால் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்வதற்கு முன்பாகவே கரியமால் இறந்துவிட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications