250 பவுன் நகை கொள்ளை போன வீட்டில் ஐ.டி. ரெய்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே கெருகம்பாக்கத்தில் ரூ. 20 லட்சம் பணம், 250 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் சக்கரபாணி ரெட்டியாரின் உறவினரான சீனிவாச ரெட்டியார், சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டுக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்த 7 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முன்னையில் சீனிவாச ரெட்டியாரையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டனர்.

வீட்டில் இருந்த 250 பவுன் நகைகள், ரூ. 25 லட்சம் ரொக்கப் பணத்தை அக்கும்பல் திருடிச் சென்றது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிரடி ஐடி ரெய்டு:

இந்த நிலையில் நேற்று சீனிவாச ரெட்டியார் வீட்டுக்கு வருமான வரித்துறை துணை இயக்குநர் விஸ்வநாதன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வந்தது.

250 பவுன் தங்க நகைகளுக்கும், ரூ.25 லட்சம் ரொக்கத்திற்கும் உரிய முறையில் கணக்கு உள்ளதா என்பது குறித்து சீனிவாச ரெட்டியார் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். மேலும் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

விசாரணை நேற்று இரவு வரை தொடர்ந்தது. மேலும் பலரிடமும் அவர்கள் விசாரணை நடத்தவுள்ளனர்.

இந்த விசாரணையின் இறுதியில், நகைகளுக்கும், பணத்திற்கும் உரிய கணக்கு இல்லாவிட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+