போதை மருந்து கொடுத்து பெண்களை கற்பழித்த சாமியார்-மனைவி புகார்
சென்னை: சென்னை அருகே போதை மருந்து கொடுத்து பல பெண்களின் கற்பை சூறையாடிய சாமியார் மீது அவரின் முதல் மனைவியே போலீசில் புகார் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்துள்ள மடிப்பாக்கத்தில் துர்கா ஆன்மீக அறக்கட்டளை என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் பழனிச்சாமி. இவர் பக்தர்களுக்கு குறி சொல்வதுடன் பில்லி, சூனியம், மந்திர தந்திர வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
இவருக்கு ஏராளமான பக்தர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.
பழனிச்சாமி சாமியாருக்கு சந்திரா, மணிமேகலை என்ற 2 மனைவிகள்ர். இந் நிலையில் பக்தையாக வந்த முகப்பேரை சேர்ந்த பெண் டாக்டர் திவ்யா(24) என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார்.
தனது மகளை சாமியார் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக திவ்யாவின் தந்தை இது பற்றி போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் திவ்யா, நானாகவே சாமியாரை திருமணம் செய்து கொண்டேன் என்று போலீசில் கூறியதால் சாமியார் மீது போலீசார் என்று கூறிவிட்டார்.
இந் நிலையில் சாமியாரின் முதல் மனைவி சந்திரா இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார்.
அதில் எனக்கும் பழனிச்சாமிக்கும் 1979ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு 21 வயதில் மகன் இருக்கிறான். எனது கணவர் துர்க்கை ஆசிரமம் என்ற பெயரில் கோவில் தொடங்கி குறி சொல்லி வந்தார்.
1994ம் ஆண்டு எனக்கு தெரியாமலேயே மணிமேகலை என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஆசிரமத்தில் தினமும் பூஜை, யாகம், போன்றவை நடைபெறும். இதில் ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். என் கணவருக்கு பெண் மோகம் அதிகம். இங்கு வரும் பல பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து அவர்களை மயக்கி கற்பழித்துள்ளார்.
டாக்டர் திவ்யா குடும்பத்தினர் 3 வருடமாக ஆசிரமத்துக்கு வருகிறார்கள். திவ்யாவும் அவர்களுடன் வருவார். அவரையும் பழனிச்சாமி மயக்கி விட்டார்.
இருவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. நான் இதை கண்டித்த என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினார். இந் நிலையில் திடீரென்று திவ்யாவை திருமணம் செய்து கொண்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சந்திரா.
விரைவில் கற்பழிப்பு சாமியார் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications