சேது திட்டத்தால் தென் தமிழகம் வளராது-விஎச்பி
கும்பகோணம்: தென் தமிழகம் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய வேண்டும் என்பதை பற்றி கருணாநிதி சிந்திக்கவேயில்லை என்று விஷ்வ இந்து பரிசத்தின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நெல்லையில் நடைபெற்ற திமுக மாநாட்டிலும், அதற்கு பின்னரும் சேது கால்வாய் திட்டம் பற்றியும், அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் முதல்வர் கருணாநிதி பேசி வருகிறார்.
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பதைவிட, கடவுள் மறுப்பு கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்பதில் கருணாநிதி தீவிரமாக உள்ளார். தென் தமிழகம் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய வேண்டும் என்பதை பற்றி அவர் சிந்திக்கவேயில்லை.
சேது திட்டம் பற்றி ஆராய்ந்த பல நிபுணர்கள், அந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் எந்தவொரு வளர்ச்சியோ, பயனோ ஏற்பட போவதில்லை என தகுந்த ஆதாரங்களுடன் ஆய்வுகள் வெளியிட்டுள்ளனர். அதை முழுவதும் உணர்ந்த மத்திய அரசு சேது திட்டத்தை நிறைவேற்றுவதில் இருந்து தற்போது பின்வாங்கியுள்ளது.
மாறாக இத்திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்றால் சேது கால்வாய் அவர்களது நோக்கமாக இருக்காது. ராமர் பெயரில் உள்ள இடத்தை அழிக்க வேண்டும் என்பது தான் உள் நோக்கமாகும். ராமர் பாலத்துக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, காங்கிரஸ் கட்சிக்கு பெருமளவில் பாதகம் ஏற்படும் என்பது அவர்களுக்கே தெரியும்.
உண்மையிலேயே தமிழகத்தின் தென்பகுதி பொருளாதார வளர்ச்சியடைய வேண்டும் என்று கருணாநிதி விரும்பினால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமர் ஆகிய 6 மாவட்டங்களை சிறப்பு பொருளாதார மண்டலங்களாக அறிவிக்கவேண்டும்.
இந்த மாவட்டங்களில் இருந்து கிடைக்கும் மீன்களின் மூலம் வருடத்திற்கு ரூ.2,000 கோடி ஏற்றுமதி நடைபெறுகிறது. மீன்வளத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து மீன்பிடி துறைமுகங்களை இம்மாவட்டங்களில் அமைத்தால் ரூ.10,000 கோடி வரை ஏற்றுமதியின் அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர் என்றார் வேதாந்தம்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications