அமெரிக்க துணை அதிபர் மாளிகையில் தீ - பரபரப்பு
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், வெள்ளை மாளிகை வளாகத்தில் உள்ள துணை அதிபர் அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இது தீவிரவாத சதியாக இருக்குமோ என்ற அச்சம் அமெரிக்க மக்களிடையே எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான வெள்ளை மாளிகை வளாகத்தில் துணை அதிபருக்கான மாளிகை உள்ளது.
இந்த அலுவலகத்தின் 2வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. குபுகுபுவென தீ கிளம்பிப் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் நடந்தபோது அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் டிக் செனியும், புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்தனர்.
தீவிபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை. இருப்பினும் பெரும் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தீ பத்துக்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் இது தீவிரவாதச் செயலாக இருக்கலாம் என்ற அச்சம் அமெரிக்க மக்களிடையே நிலவுகிறது.












Click it and Unblock the Notifications