என்னை கொல்ல முயலும் சார்லஸ்-டயானாவின் கடித பரபரப்பு
பாரீஸில் தனது காதலர் பயத் டோடியுடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் டயானா. அவரது மரணம் எப்படி நடந்துத என்பதில் இன்னும் கூட தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.
இந் நிலையில் டயானா தனது கைப்பட எழுதிய ஒரு கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பட்லரான பால் பர்ரெலுக்கு டயானா எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கணவர் சார்லஸ் தன்னை கார் விபத்தில் கொல்ல முயற்சிப்பதாக கூறியுள்ளார்.
டயானாவும், சார்லஸும் பிரிந்த பின்னர் 1993ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தக் கடிதத்தை, அனுப்பியுள்ளார் டயானா. கருப்பு மையால் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் டயானா கூறியிருப்பதாவது:
என்னைக் யாராவது கட்டித் தழுவி ஆதரவாக பேச மாட்டார்களா, நான் தலை நிமிர்ந்து நிற்க யாரேனும் ஆறுதலாக இருக்க மாட்டார்களா என்ற ஆதங்கத்துடன் இந்தக் கடிதத்தை எழுத அமர்ந்திருக்கிறேன்.
எனது வாழ்க்கையின் இப்போதைய காலகட்டம் மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது. எனது காரை விபத்தில் சிக்க வைத்து எனைக் கொல்ல எனது கணவர் முயலுகிறார். கார் பிரேக்கை பழுதாக்கியோ அல்லது மோசமான தலைக் காயத்தை உண்டாக்கியோ என்னைக் கொல்ல அவர் சதி செய்கிறார்.
என்னைக் கொன்று விட்டு எனது பிள்ளைகள் வில்லியம், ஹாரியின் பணிப் பெண்ணான டிக்கி போர்க்கை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று அவர் திட்டமிடுகிறார். இப்போது தன்னுடன் சுற்றி வரும் கமீலா பார்க்கர் குறித்து சார்லசுக்கு பொருட்டே இல்லை. அவர் குறி வைத்துள்ளது டிக்கி போர்க்கைத்தான்.
கமீலாவை விட வேலைக்காரப் பெண்ணான டிக்கி போர்க் மீதுதான் அவர் வெறியாக உள்ளார் என்று கூறியுள்ளார் டயானா.
இந்தக் கடிதம் முன்பே ஒரு முறை வெளியானது. ஆனால், அதில் கமீலா குறித்தும், டிக்கி போர்க் குறித்தும் டயானா குறிப்பிட்ட விஷயங்களை பிரட்டிஷ் அரசு மறைத்துவிட்டது. இப்போது தான் முழுக் கடிதமும் வெளியாகியுள்ளது.
வேலைக்காரி மீது விருப்பம் கொண்டு, தன்னை கார் விபத்தில் சிக்க வைத்துக் கொல்ல சார்லஸ் முயல்வதாக டயானா தனது கைப்பட எழுதியுள்ள இந்தக் கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications