வருசநாட்டில் பிடிபட்ட 2 நக்சலைட்டுகள் சிறையில் அடைப்பு
மதுரை: தேனி மாவட்டம் வருசநாட்டு மலைப் பகுதியில் போலீஸாரிடம் சிக்கிய 2 நக்சலைட்டுகள் ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வருசநாடு மலைப் பகுதியில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று முன்தினம் நடத்திய அதிரடி வேட்டையில் 5 நக்சலைட்டுகள் சிக்கினர். இவர்களில் நக்சலைட் கும்பலின் தலைவன் பழனி என்கிற மகாலிங்கம், மருது, முருகானந்தம் ஆகியோர் துப்பாக்கிக் குண்டு பட்டு காயமடைந்தனர். மூன்று பேரும் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டீஸ்கரைச் சேர்ந்த யோகேஷ் என்கிற சச்சின் மற்றும் பாலமுருகன் ஆகியோர் போலீஸாரிடம் சரணடைந்தனர்.
இவர்கள் இருவரையும் தீவிரமாக விசாரித்த பின்னர் ஆண்டிப்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். பலத்த பாதுகாப்புடன் நீதிபதி சுந்தரய்யா முன்பு இருவரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர்கள் இருவரையும் ஜனவரி 3ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஒருவரை புதுக்கோட்டை சிறையிலும், இன்னொருவரை மதுரை மத்திய சிறையிலும் போலீஸார் கொண்டு போய் அடைத்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications