சென்னை திரும்பினார் முதல்வர் கருணாநிதி
சென்னை: டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் கருணாநிதி இன்று பிற்பகல் சென்னை திரும்பினார்.
கடந்த 18ம் தேதி முதல்வர் கருணாநிதி டெல்லி சென்றார். 19ம் தேதி நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று நடந்த முதல்வர்கள் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
இதுதவிர பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார். மேலும், பல்வேறு தலைவர்களும் முதல்வரை தமிழ்நாடு இல்லம் வந்து சந்தித்தனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தனுடன் அவர் பேச்சுவார்த்தையும் நடத்தினார். மேலும் தமிழகத்திற்கு மின்சாரம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோனியா காந்தியிடமும், மன்மோகன் சிங்கிடமும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் முதல்வர் கருணாநிதி சென்னை திரும்பினார். அவருடன் துணைவியார் ராஜாத்தி அம்மாள், அமைச்சர்கள் பொன்முடி, ராஜா, ஏ.வ. வேலு ஆகியோரும் சென்னைக்கு வந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications