மழை வெள்ள நிவாரணத்தில் தாமதம்: மக்கள் சாலை மறியல்
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உரிய நிவாரணப் உதவிகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ளாததால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர்.
தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக பெய்த தொடர் மழையால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள மெய்காவல்புத்தூர் என்ற கிராமம் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வெள்ள நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஜெயங்கொண்டம் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் வெள்ள நிவாரண உதவிகள் கண்டிப்பாக அளிக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சேவியர் கிறிஸ்டோ நாயகம் வெள்ளம் பாதித்த பகுதியைப் பார்வையிட வந்தபோது பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு அதிகாரிகள் ஒருவர் கூட வரவில்லை என்று முறையிட்டனர்.
இதையடுத்து உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்தார். ஆனால் அதன் பிறகும் கூட அதிகாரிகள் அப்பகுதியை கண்டுகொள்ளாமல் விட்டதால் ஆத்திரமடைந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் குதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications