தூக்கு தண்டனை பெற்ற 3 அதிமுகவினரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அதிமுகவினர் 3 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.
இது தொடர்பான வழக்கில் சேலம் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2ம் தேதி முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய 3 அதிமுகவினருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு 7 வருடங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதனையடுத்து முனியப்பன், நெடுஞ்செழியன் மற்றும் ரவீந்திரன் ஆகிய 3
பேரையும் கோவை மத்திய சிறையில் 2008 ஜனவரி 10ம் தேதியன்று தூக்கிலிட சேலம் நீதிபதி மாணிக்கம் வாரண்ட் பிறப்பித்தார்.
இந்நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்களின் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
3 மாணவிகள் மரண் மிகவும் கொடூர கொலை அல்ல. திடீரென ஏற்பட்ட ஒரு நிகழ்வு தான். மீடியாக்கள் இதை பெரிதுபடுத்தியதால் நீதிமன்றம் தவறான எண்ணத்தில் மரண தண்டனை அளித்துள்ளது. இறந்தவர்களின் உயிரிழப்புக்கு வன்முறை கும்பலே காரணம்.
அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த வழக்கு இப்பிரிவுக்கு உட்படாது. சந்தேகத்துக்கு இடமின்றி இது அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை. நேரடி சாட்சியங்களும் தவறானவை என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications