மோடிக்கு லஷ்கர் இ தொய்பா மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு
காந்திநகர்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு மூலம் தாக்கக் கூடும் என்று மத்திய உளவுத்துறை குஜராத் மாநில அரசை எச்சரித்துள்ளது. இதையடுத்து மோடிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய அரசு குஜராத் அரசுக்கு ஒரு உஷார் தகவலை அனுப்பியுள்ளது. அதில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், மோடியை மனித வெடிகுண்டு மூலம் தாக்க திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை செய்தி வந்துள்ளதாகவும், மோடிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அது அறிவுறுத்தயுள்ளது.
இதையடுத்து மோடிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு உச்சகட்ட அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மோடி செல்லும் இடமெல்லாம் தீவிர சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் அகமதாபாத் நகரின் காலுபூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு மோடி செல்லவுள்ளார். இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
மோடி இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளார். மத்திய அரசு அவருக்கு கருப்புப் பூனைப் படை பாதுகாப்பை வழங்கியுள்ளது. அதேசமயம், குஜராத் அரசும் மோடிக்காக விசேஷ அதிரடிப்படையை உருவாக்கி அந்தப் பாதுகாப்பை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராகத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. 3வது முறையாக மோடி முதல்வராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications