காங்கிரஸ் வலுவான கட்சியாக மாறும் - மேலிடப் பார்வையாளர்
சென்னை: தமிழக காங்கிரஸ் அடுத்த ஆண்டில் இருந்து வலுவான கட்சியாக மாறும் என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண்குமார் கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொண்டர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும், அவர்களை சந்திக்கவும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறேன்.
கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் உணர்வுப் பூர்வமாக விரும்புகிறார்கள். அதற்கு வேண்டிய முயற்சிகள் எடுக்கப்படும். அடுத்த ஆண்டிலிருந்து தமிழக காங்கிரஸ் வலுவான கட்சியாக மாறும்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதைப்பற்றி நான் வேறு எதுவும் பேச விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் நாங்கள் அமைத்த குழுவின் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதிமன்றமே அவர்களை விடுவித்தாலும் காங்கிரஸ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். எங்களது உட்கட்சி பிரச்சனையை வெளிப்படையாக பேச விரும்பவில்லை.
மத்திய அரசின் 3 ஆண்டு ஆட்சியின் சாதனைகள், காங்கிரசின் திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் எடுத்துச் செல்லவேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்ற விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் காங்கிரசின் எதிரிகள். தீவிரவாத அமைப்புகளை காங்கிரஸ் கண்டிப்பாக எதிர்க்கும் என்றார் அருண்குமார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு!












Click it and Unblock the Notifications