செக்ஸ் கல்வியால் 'லேட்' ஆகும் செக்ஸ்!!

Subscribe to Oneindia Tamil


நியூயார்க்: பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் பாலியல் கல்வியால், இளம் மாணவ, மாணவியரிடையே உடலுறவு கொள்ளும் பழக்கம் பட்டு வருவதாக அமெரிக்க அரசின் ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அரசின் இளம் பிராயத்தினருக்கான நலத்துறை நடத்திய ஆய்வில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 15 முதல் 19 வயதுக்குட்பட்ட 2000 இளம் பிராயத்தினரிடையே கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில், பாலியல் கல்வியைப் பயிலும் மாணவர்களில் 71 சதவீதம் பேர், 15 வயதுக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தவிர்க்க விரும்புவதாகவும், மாணவியரில் 59 சதவீதம் பேர் செக்ஸ் வைத்துக் கொள்வதை தவிர்க்க விரும்புவதாகவும் தெரிய வந்தது.

மேலும் பாலியல் கல்வியைப் படிக்கும் மாணவர்களில் 2.77 மடங்கினர், முதல் உடலுறவின்போது கருத்தடைப்பு முறைகளை விரும்புவதாகவும் தெரிய வந்தது.

இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான திரிஷா மியூலர் கூறுகையில், பாலியல் கல்வியால் மாணவ, மாணவியரிடையே நல்ல விழிப்புணர்வு உண்டாகிறது. மேலும் பள்ளிகளில் பயிலும் ஆப்பிரிக்க - அமெரிக்க மாணவியரில் 91 சதவீதம் பேர் 15 வயதுக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தவிர்க்க விரும்புகின்றனர்.

அதேசமயம், பாலியல் கல்வியால், பொதுவாக டீன் ஏஜ் வயதினரிடையே கருத்தடுப்பு விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+