லாரி டிரைவரிடம் அழகியை காட்டி பணம் பறித்த கும்பல்
கரூர்: கரூர் அருகே நள்ளிரவில் அழகியை காட்டி லாரி டிரைவரிடம் பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து ஹைதராபாத் நோக்கி உப்பு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.
அந்த லாரி கரூர் மாவட்டம் அருகில் வந்த போது கணவாய் என்ற இடத்தில் ஒரு பெண் நின்று லாரியை கை காட்டி நிறுத்தியுள்ளார். பிரேக் போட்டு லாரியை நிறுத்திய டிரைவர் பாண்டியன் லாரியிலிருந்து கீழே இறங்கி அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளார்.
அப்போது அந்த பெண் லாரி டிரைவரை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். சபலம் அடைந்த லாரி டிரைவர் பாண்டியன் அந்த அழகியுடன் அருகில் உள்ள ஒரு புதர்ப் பகுதிக்குச் சென்றார்.
உல்லாசமாக இருக்கலாம் என நினைத்துச் சென்ற பாண்டியனுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் புதரில் மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென கத்தியை காட்டி மிரட்டி கையில் இருக்கிற பணத்தைக் கொடுத்து விட்டுச் செல்லுமாறு மிரட்டியது.
இதையடுத்து கையில் இருந்த ரூ.2,000 பணத்தைக் கொடுத்துள்ளார் பாண்டியன். பணத்தைப் பறித்த அக்கும்பலும், அழகியும், சாலைக்கு வந்து அங்கிருந்த பாண்டியனின் லாரியை எடுத்துக் கொண்டு பறந்து விட்டனர்.
பணமும் போய், லாரியும் போய் சோகத்துடன் நடந்தே ஆண்டிப்பட்டி என்ற ஊருக்கு வந்து சேர்ந்தனர் பாண்டியனும், கிளீனர் ஆறுமுகமும். அங்கு அவர்களது லாரி நின்றிருந்தது.
பணம் போனால் பரவாயில்லை, லாரி கிடைத்ததே என்று மகிழ்ந்த அவர்கள் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸாரும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் யாரும் சிக்கவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications