ரேஷன் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் புதிய திட்டம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் மளிகைப் பொருட்களை, நுகர்வோர்களுக்கு டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை மாவட்ட சிவில் சப்ளைஸ் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 669 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் பொது மக்களுக்கு மஞ்சள், அரிசி, சர்க்கரை, புளி, வெந்தயம், கடுகு, சீரகம், கடலை பருப்பு, துவரம் பருப்பு, சோப்பு போன்றவை குறைந்த விலையில் விற்கப்படுகிறது.
விலை குறைவாக விற்கப்படுவதால் இவற்றை வாங்க மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட சிவில் சப்ளைஸ் நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ரேஷன் கடைக்கு சென்று மக்கள் இனி கியூவில் நின்று பொருட்கள் வாங்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களின் பெயரை எழுதி கொடுத்து விட்டு வந்தால் அந்த பொருட்கள் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு தேடி வந்து கொடுத்து விடுவார்கள்.
இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து படிப்படியாக தமிழகம் முழுவதும் நிறைவேற்ற உள்ளதாக தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications