அதிக அளவில் மது கொடுத்து ஏட்டு அடித்துக் கொலை
செய்யூர்: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் தலைமைக் காவலருக்கு அதிக அளவில் மது கொடுத்து மயக்கமடையச் செய்து அவரை அடித்துக் கொலை செய்ததாக, காவல் நிலையத்தில் சிறு சிறு வேலைகள் செய்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு வடுகன்பற்று கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் செய்யூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு பவானி என்ற மனைவியும், சுரேந்திரன் என்ற மகன், மோகனப்பிரியா என்ற மகள் உள்ளனர்.
முருகேசன் செய்யூரில் அறை எடுத்துத் தங்கி வேலை பார்த்து வந்தார். மனைவி, குழந்தைகள் செங்கல்பட்டு காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு முருகேசன் இரவில் சாப்பிட சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அவரது உயிரற்ற உடல், செய்யூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே உள்ள சாலையில் கிடந்தது.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். மாவட்ட எஸ்.பி. பெரியய்யாவும் வந்தார். முருகேசன் உடல் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
முருகேசனைக் கொன்று உடலை சாலையில் போட்டு விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், செய்யூர் காவல் நிலையத்தில் சிறு சிறு வேலைகள் செய்து வந்த கண்ணன் என்பவர்தான் முருகேசனைக் கொன்றது தெரிய வந்தது. அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
அவருக்கு உதவியாக இருந்ததாக அழகு, வேலு, இளங்கோவன் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
பசுபதி ராசக்காபாளையம் படத்தில் ரஞ்சித், காவல் நிலையத்தில் எடுபிடி வேலைகள் பார்ப்பவர் போல நடித்திருப்பார். அதேபோலத்தான் கண்ணனும் செயல்பட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் போலீஸ்காரர் போல செயல்பட ஆரம்பித்துள்ளார் கண்ணன். இதையடுத்து இனிமேல் காவல் நிலையத்திற்குள் வரக் கூடாது, எந்த வேலையாக இருந்தாலும் வெளியிலிருந்தபடி கேட்டு அதைச் செய்ய வேண்டும் என முருகேசன் கண்டிப்பாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், தனது நண்பர்களிடம் இதைக் கூறியுள்ளார். பின்னர் முருகேசனைத் தீர்த்துக் கட்ட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி சம்பவத்தன்று இரவு சாப்பிடச் சென்ற முருகேசனை வழிமறித்து மது அருந்தக் கூப்பிட்டுச் சென்றுள்ளனர். அங்கு அளவுக்கு அதிகமாக அவரை மது அருந்தச் செய்தனர். அரை மயக்க நிலைக்குப் போய் விட்ட முருகேசனை அருகில் உள்ள சுடுகாட்டுக்குக் கூட்டிச் சென்று அங்கு வைத்து அடித்துக் கொன்றனர்.
பின்னர் உடலை காரில் ஏற்றிக் கொண்டு சென்றனர். பின்னர் வழியில் சாலையிலேயே போட்டு விட்டு போய் விட்டனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications