இமாச்சல் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பிற்பகலில் முடிவடைந்தது.
மொத்தமுள்ள 68 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 41 தொகுதிகளையும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்தையும், சுயேச்சைகள் உள்ளிட்ட மற்ற கட்சிகள் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
தற்போது இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வீரபத்ர சிங்கின் பதவிக் காலம் 2008ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி வரை இருந்தாலும், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததால் பதவியில் தொடரப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
சிம்லா மாவட்டத்தின் ரோஹ்ரு தொகுதியில் போட்டியிட்ட வீரபத்ர சிங், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் கெளசிராம் பல்நடாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக சார்பில் முதல்வர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பிரேம்குமார் துமால் ஹமிர்பூர் மாவட்டத்தின் பாம்சன் தொகுதியில் போட்டியிட்டு 26,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
30ம் தேதி பதவியேற்பு:
பாஜக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து அம்மாநில முதல்வராக டிசம்பர் 30ம் தேதி பிரேம்குமார் துமால் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம் மாநிலத்தில் கடந்த நவம்பர் 14, டிசம்பர் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது நினைவுகூறத்தக்கது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 41 இடங்களிலும் பாஜக 17 வென்றது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications