பண்ணை வீட்டில் நள்ளிரவில் ஆட்டம்-7 சாப்ட்வேர் என்ஜீனியர்கள் கைது

Subscribe to Oneindia Tamil


சென்னை: கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் நள்ளிரவைத் தாண்டியும், குடித்து விட்டு நடனமாடிக் கொண்டிருந்த சாப்ட்வேர் என்ஜீனியர்கள் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் பெண்களை மட்டும் எச்சரித்து விடுவித்தனர்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ரிசார்ட்டுகள், தனியார் காட்டேஜ்கள், பண்ணை இல்லங்களில் நள்ளிரவையும் தாண்டு கூத்து, கும்மாளம் நடந்து வருகின்றன. இங்கு அடிக்கடி போலீஸார் ரெய்டு நடத்தி நடனத்தில் கலந்து கொள்பவர்களை எச்சரித்து அனுப்பி வருவது வழக்கமாக உள்ளது.

இந் நிலையில் நீலாங்கரையை அடுத்துள்ள பனையூரில் ஒரு பண்ணை வீட்டில் நள்ளிரவை தாண்டியும் மது விருந்தும், நடனமும் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் குறிப்பிட்ட பண்ணை வீட்டில் ரெய்ட் நடத்தினர்.

அங்குள்ள நீச்சல் குளத்தில் ஆண்களும், பெண்களும் கைகளில் மது பாட்டில்களுடன் கிடந்தனர். இன்னொரு பக்கம் நடனம் களை கட்டியிருந்தது.

இதையடுத்து அங்கிருந்த 7 ஆண்கள், 10 பெண்களை காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அனைவரும் துரைப்பாக்கத்தில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவர்.

இதையடுத்து அவர்களில் பெண்களை மட்டும் எச்சரித்து அனுப்பி வைத்து விட்டனர். அவர்களுடன் 7 ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+