பெனாசிர் உடல் அடக்கம்
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
சிந்து மாகாணத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான காரி குதா பக்ஸில் பெனாசிரின் தந்தை சுல்பிகர் அலி புட்டோ அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக நேற்று கொலை செய்யப்பட்ட பூட்டோவின் உடல் ராவல்பிண்டியில் இருந்து ராணுவ விமானம் மூலம் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்கூருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உடல் மொகஞ்சதாரோவுக்கு ெகாண்டு செல்லப்பட்டது.
பின்னர் அவரது சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இன்று பிற்பகலில் பூட்டோவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
துபாயில் வசித்து வரும் பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரி, குழந்தைகள் கண்ணீருடன் பெனாசிரின் உடலுடன் இறுதி ஊர்வலத்தில் முன் சென்றனர். பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications