3 சென்னை என்ஜீனியர்கள் யு.எஸ்.சில் பலி
சென்னை: அமெரிக்காவின் செயின்ட் பிரான்சிஸ்கோ நகரில் கார் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர்கள் மூவர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தவர் மாலா (31). இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். இவரது கணவர் நடராஜன் (35). இவரும் சாப்ட்வேர் என்ஜீனியர்தான். இவர்களுக்கு மோஹித் என்ற 3 வயது மகன் உள்ளான்.
மாலாவும், நடராஜனும், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள காக்னிசன்ட் டெக்னாலஜிஸ் (சி.டி.எஸ்) நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
நடராஜன், மாலாவுடன், பூவரசன் (28) என்பவரும் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் பூவரசனுக்கு திருமணம் ஆனது. பூவரசனின் வீடு சைதாப்பேட்டையில் உள்ளது. இவரது தந்தை தமிழ்வாணன் தபால் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில், நடராஜன், மாலா, பூவரசன் ஆகியோருக்கு அமெரிக்காவுக்கு பணி மாறுதல் கிடைத்தது. இதையடுத்து இரு குடும்பத்தினரும் அங்கு சென்றனர். கலிபோர்னியாவில் அருகருகே வீடு எடுத்துத் தங்கினர்.
கடந்த 26ம் தேதி காலை செயின்ட் பிரான்சிஸ்கோ நகருக்கு பொருட்கள் வாங்க ஒரே காரில் சென்றுள்ளனர். பொருட்களை வாங்கி விட்டுத் திரும்புகையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.
இதில் சிக்கி நடராஜன், மாலா, அவர்களது குழந்தை மற்றும் பூவரசன் தம்பதியினர் ஆகிய ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஐந்து பேரும் விபத்தில் இறந்த தகவல் சென்னையில் உள்ள அவர்களது உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அமெரிக்காவுக்கு விரைகின்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications