தமிழகத்தை குறி வைக்கும் மாயாவதி!

உத்தரப்பிரேதசத்தில் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிரம்மாண்டமான வெற்றியை பெற்று அம்மாநிலத்தின் முதல்வரானவர் மாயாவதி.
தலித் வாக்குகள் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முன்னேறிய வகுப்பினரின் கணிசமான ஆதரவையும் அவர் பெற்றார்.
இதையடுத்து உ.பியையும் தாண்டி அரசியலில் தீவிரமாக ஈடுபட அவர் தீர்மானித்துள்ளார். அதன் முதல் கட்டமாக குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் அவரது பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட்டது.
இருந்தாலும் இதில் அவருக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஓட்டுக்கள் கணிசமாக பிரியக் காரணமாக இருந்தார்.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள தலித், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், உயர் சமூகத்தினரின் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சிக்குத் திரட்டும் வகையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய் திட்டமிட்டுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக தென் மாநிலங்களில் முதலில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அதன் ஒரு பகுதியாக நாளை சென்னை வருகிறார்.
இதுகுறித்து அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுரேஷ் மானே கூறுகையில், பெரியார், அம்பேத்கர் ஆகியோர் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் சம உரிமை பெறுவதற்காக போராடினார்கள்.
அந்த வகையில் தலித்துகள், பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்,
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரின் நிலை உயர வேண்டும். உயர் சமூகத்தினரும் இவர்களுடன் சகோதரர்களாக இணைந்து முன்னேற வேண்டும்.
இந்த நோக்கத்திற்காக மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சகோதரத்துவ மாநாடு நடைபெறுகிறது. அதில் கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முதல்வருமான மாயாவதி பங்கேற்கிறார். தற்போது மராட்டிய மாநிலத்திலும், தமிழகத்திலும் இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநிலங்களில் பல்வேறு மதங்கள், சமுதாயம், பொருளாதார வேறுபாடுகள் காணப்படுகிறது. பெரியார், அம்பேத்கர் வழியில் அனைத்து சமூகத்தினரையும் சகோதரர்களாக ஒருங்கிணைப்பதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில சகோதரத்துவ மாநாடு சென்னையில் நாளை நடக்கிறது. அமைந்தகரையில் உள்ள புல்லா அவென்யூவில் மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் மாயாவதி பங்கேற்றுப் பேசுகிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications