நக்சல் தொடர்பு: பாமக செயலாளர் கைது
திண்டுக்கல்: நக்சல் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக திண்டுக்கல் மாவட்ட பாமக செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் அருகேயுள்ள அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்தவர் ஜஸ்டின் திரவியம். இவர் திண்டுக்கல் தெற்கு மாவட்ட பாமக செயலாளராக உள்ளார்.
ஜஸ்டின் திரவியம் 10 வருடங்களுக்கு முன்னர் தர்மபுரி பகுதியில் வசித்து வந்தபோது மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்ற இயக்கத்தில் முழு நேரமாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 1997ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி ஒரு சம்பவத்தில் ஜஸ்டின் திரவியம் மீது சட்ட விரோதமாக கூடுதல், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல், கொலை முயற்சி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 10 ஆண்டிற்கு பின்னர் திண்டுக்கல்லுக்கு நேற்று காலை வந்த தர்மபுரி மாவட்ட நக்சல் ஒழிப்பு தனிப்படை போலீசார் ஜஸ்டின் திரவியத்தை கைது செய்து விசாரணைக்காக அவரை தர்மபுரி அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பாக ஜஸ்டின் திரவியத்திற்கு தர்மபுரி நீதிமன்றத்தில் பிடிவாரண்ட பிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காகவே, தர்மபுரி நக்சல் ஒழிப்பு போலீசார் ஜஸ்டின் திரவியத்தை அழைத்துச் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பெண்களை கொத்தடிமைகளாக வைத்து சித்திரவதை செய்ததாக நேற்று முன் தினம் திருவண்ணாமலையில் பாமக பிரமுகர் ஒருவர் கைதான நிலையில் திண்டுக்கல் மாவட்ட பாமக செயலாளர் கைதாகியுள்ளார்.
பாமக, திமுக மோதல் தொடங்கியுள்ள நிலையில் இந்தக் கைதுகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications