அரிசி கடத்தல்காரர்கள் உதவி கலெக்டரை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் கடத்தல் அரிசியைப் பிடிக்க முயன்ற உதவி கலெக்டர் மீது மினி லாரியை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மினி லாரியில் அரிசி கடத்தப்படுவதாக உதவி கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தேவியாகுறிச்சி ரயில் கேட்டுக்கு அருகே பாஸ்கர பாண்டியன், தாசில்தார் காளமேகம் உள்ளிட்ட அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் ஒரு மினி லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அதிகாரிகள், அந்த லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினர்.
ஆனால் லாரி டிரைவர் படு வேகமாக அதிகாரிகளை நோக்கி லாரியை ஓட்டி வந்தார். அவர்கள் மீது மோதும் நோக்கில் அவர் லாரியை ஓட்டி வந்தார்.
இதையடுத்து சுதாரித்த அதிகாரிகள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து விலகி உயிர் தப்பினர். பின்னர் தங்களது ஜீப்பில் அந்த மினி லாரியை துரத்தினர்.
சிறிது நேர துரத்தலுக்குப் பின்னர் காட்டுக்கோட்டை என்ற இடத்தில் லாரியை மறித்னர். அப்போதும் லாரி ஓட்டுநர், அதிகாரிகளின் ஜீப் மீது மோத முயன்றார். அதிலிருந்தும் அதிகாரிகள் தப்பினர்.
பின்னர் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தங்களது வண்டியை சாலையின் குறுக்கே நிறுத்தினர். இதனால் அரிசி கடத்தல்காரர்களால் தப்ப முடியாமல் போனது.
அப்படியும் கூட அந்த கும்பல் மினி லாரியை குறுக்குப் பாதையில் செலுத்த முயன்றது. ஆனால் அங்கு ஒரு கண்டெய்னர் லாரி இருந்ததால் அதில் மினி லாரி மோதியது. இதையடுத்து டிரைவர் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
பின்னர் அதிகாரிகள் லாரியில் சோதனையிட்னர். அப்போது அதில் 150 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. இதன் மதிப்பு ரூ. 1.5 லட்சமாகும்.
இந்த அரிசிக் கடத்தல் குறித்து உணவுப் பொருள் கடத்தல் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளன்.
உதவி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை லாரி ஏற்றிக் கொள்ள முயன்றது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை ஜனங்களுக்குப் போய்ச் சேர வேண்டிய ரேஷன் அரிசியைக் கடத்தியதோடு, அதைத் தடுக்க முயன்ற அதிகாரிகளை கொல்லவும் முயலும் இதுபோன்ற சமூக விரோதிகளை ஒடுக்க பொடா போன்ற கடுமையான சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தாலும் தவறே இல்லை.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications