புத்தாண்டு: நள்ளிரவில் கோவில்களைத் திறக்க இந்து முன்னணி எதிர்ப்பு
சென்னை: புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் கோவில்களைத் திறக்க கூடாது என்று இந்து முன்னணி கூறியுள்ளது. தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை இதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அது எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நள்ளிரவில் கோவில்களைத் திறப்பது ஆகம விதிகளுக்கும், இந்து மத பாரம்பரியத்திற்கும் விரோதமானது.
கோவில்களில் எப்போது பூஜை செய்ய வேண்டும் என்பதற்கு நேரம் காலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை மீறி நள்ளிரவில் கோவில்களைத் திறப்பது பாவச் செயலாகும்.
இந்துக்களின் மத நம்பிக்கைப்படி நாள் என்பது சூரிய உதயத்திற்குப் பிறகுதான் தொடங்குகிறது.
எனவே இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை நள்ளிரவில் திறக்க அரசு அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க அரசும், காவல்துறையும் பல கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து அதை கடுமையாகவும் அமல்படுத்துகின்றன. அதே போல கோவில் திறப்பு விவகாரத்திலும் இந்து மத நம்பிக்கைக்கு விரோதமாக யாரும் நடக்காமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் முருகானந்தம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications