நக்சலைட் வேட்டையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. திடீர் மரணம்
தேனி: தேனி மலைப் பகுதிகளில் நடந்து வரும் நக்சலைட் வேட்டையில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
தேனி மாவட்டம் வருசநாட்டு மலைப் பகுதியில் டிசம்பர் 20ம் தேதி போலீஸார் அதிரடி வேட்டை நடத்தி, துப்பாக்கியால் சுட்டு 5 நக்சலைட்டுகளைப் பிடித்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 5 பேர் காட்டுக்குள் தப்பி விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களைத் தேடும் பணியில் கியூ பிரிவு போலீஸாரும், சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
தேனியில் தங்கியிருந்து மலைப் பகுதி கிராமங்களுக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பணியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் டேவிட் ராஜ்குமார் (50) என்பவரும் ஈடுபட்டிருந்தார். இவர் நேற்று கழிப்பறைக்குச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதையடுத்து சக போலீஸார் கழிப்பறைக்குச் சென்று பார்த்தபோது ராஜ்குமார் அங்கு மயங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications