காவல் நிலையம் முன்பு தீக்குளித்த வாலிபர் சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் காவல் நிலையம் முன் தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி மகன் ராஜா (24). இவர் ரிக்ஷா ஓட்டி பிழைத்து வருகிறார்.
2 தினங்களுக்கு முன்னர் ராஜா ரிக்ஷாவில் சவாரி ஏற்றி வந்து கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் ராஜாவை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த ராஜா மனம் உடைந்த நிலையில் மதுரை, விளக்குத்தூண் காவல் நிலையம் முன்பாக மண்ணெண்ணெய் கேனுடன் வந்து, தன்னை அடித்து உதைத்த போலீசார் பெயரை சொல்லி உடலில்
மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதைக் கண்ட போலீசாரும், அப்பகுதியில் உள்ளவர்களும் அதிர்ச்சியடைந்து அவரை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications