பல்லடத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை
பல்லடம்: பல்லடத்தில் இளம் பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்தவரான பொன்னுசாமி (35), பாலக்காடைச் சேர்ந்த சுனிதா (25) ஆகியோருக்கு 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பொன்னுசாமி பல்லடம் கோழிப்பண்ணையில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதனால் பல்லடத்தில் உள்ள தனது அக்காள் காந்திமதியின் வீட்டருகே மனைவி சுனிதாவுடன் குடியேறினார்.
வேலை தொடர்பாக பொன்னுசாமி வெளியூர் செல்லும் நேரங்களில் சுனிதாவுக்கு துணையாக காந்திமதி இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சுனிதாவின் கணவர் பொன்னுசாமி ஓசூருக்கும், காந்திமதி தனது மாமனார் இறந்து விட்டதால் திருச்சிக்கும் சென்று விட்டனர். இந் நிலையில் சுனிதாவின் வீட்டிற்கு அவரின் உறவினர்கள் சாந்தா, சியாமளா, தேவதாஸ் ஆகியோர் வந்தனர்.
அப்போது வீட்டுக்குள் சுனிதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது கண்டு திடுக்கிட்ட அவர்கள் சுனிதாவின் வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்தனர். உடனே அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் உடலை சோதனையிட்டபோது அவர் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சுனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த வீட்டுக்கு போலீஸ் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டிலிருந்து அருகில் பொன்னுசாமியின் அக்கா காந்திமதி வீட்டு வரை சென்று நின்று விட்டது.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications