சர்வதேச விசாரணைக்கு தயார் - முஷாரப்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோ படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனிடம் இன்று பேசினார். பெனாசிர் படுகொலை தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை தேவைப்பட்டால் அதை நடத்துவதற்கு பாகிஸ்தான் அரசு தயாராக இருப்பதாக அப்போது பிரவுனிடம் அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அதிபரின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறுகையில், இங்கிலாந்து பிரதமர் பிரவுன், அதிபர் முஷாரப்பை தொடர்பு கொண்டு பேசினார். அஏப்போது, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் முஷாரப்பின் செயல்பாடுகளை அவர் பாராட்டினார்.
இருப்பினும், சர்வதேச விசாரணை தொடர்பாக முஷாரப், பிரவுனிடம் எந்தவிதமான உறுதிமொழியையும் தெரிவித்தாரா என்பது குறித்து தெரியாது என்றார்.












Click it and Unblock the Notifications