ஸ்டார் ஹோட்டலில் நள்ளிரவில் கலாட்டா - 30 பேர் காயம்
சென்னை: சென்னையில் ஸ்டார் ஹோட்டலில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது மேடை சரிந்து, பலர் நீச்சல் குளத்தில் மூழ்கினர். ஹோட்டல் நிர்வாகத்தை கண்டித்துப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆடல், பாடல் நிகழ்ச்சிக்காக ஹோட்டல் வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தின் மீது பெரிய மேடையைப் போட்டு வைத்திருந்தனர். அந்த மேடை மீது விருந்துக்கு வந்திருந்தவர்கள் மது போதையுடன் ஆடிப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
நள்ளிரவை நெருங்கியபோது திடீரென அந்த மேடை பாரம் தாங்காமல் சரிந்து நீச்சல் குளத்திற்குள் விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய பலர் நீச்சல் குளத்தில் விழுந்தனர்.
இதில் பலர் காயமடைந்தனர். நீரில் மூழ்கித் தத்தளித்த 7 பேரை போலீஸார் காப்பாற்றி மீட்டனர்.
ஹோட்டல் நிர்வாகத்தின் மோசமான ஏற்பாடே இந்த சம்பவத்திற்குக் காரணம் என கொந்தளித்த, பணம் கொடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்கள்,ஹோட்டல் நிர்வாகத்தைக் கண்டித்துப் போராட்டத்தில் குதித்தனர்.
ஆனால் நிர்வாகத்தின் சார்பில் யாரும் பதில் சொல்ல வரவில்லை. இதனால் கொதிப்படைந்த கூட்டத்தின்,தங்களது பணத்தைத் திருப்பித் தருமாறு கோரி கோஷமிட்டனர்.
அவர்களை போலீஸார் கலைந்து செல்லுமாறு கேட்டனர். ஆனால் குடிபோதையில் இருந்த கூட்டத்தின், போலீஸாரை அடிக்கப் பாய்ந்தனர். இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர்.
நள்ளிரவில் நடந்த இந்த கலாட்டாவால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications