விலையைக் குறைக்காவிட்டால்... சிமென்ட் நிறுவனங்களுக்கு கருணாநிதி எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் சிமென்ட் நிறுவனங்கள் தாங்களாகவே விலையைக் குறைக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் நலன் கருதி அந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகளை நாட்டுடமையாக்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்று முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (ஜனவரி 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சிமென்ட் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் உயர் மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளற், தமிழக அரசின் சிமென்ட் நிறுவன தலைவர், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மத்திய அரசிடமிருந்து உடனடியாக 1 லட்சம் டன் சிமென்ட்டை இறக்குமதி செய்து அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து நுகர்வோர்களுக்கு எந்தவித லாபமும் இல்லாமல், அடக்க விலையில் விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுதொடர்பான நடவடிக்கைளை உடனடியாக எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள தனியார் சிமென்ட் நிறுவனங்கள் உடனடியாக தாங்களாகவே விலையைக் குறைக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவற்றின் தொழிற்சாலைகளை நாட்டுடமையாக்க அரசு நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிமென்ட் விலையைக் குறைக்க வேண்டும், சிமென்ட்டை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். வருகிற 7ம் தேதி இதுதொடர்பாக போராட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி சிமென்ட் விற்பனையை நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடியாக விற்க உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications