வருமான வரி செலுத்துவோருக்கு கேஸ் சிலிண்டெர் விலை உயர்கிறது

டீக்கடை, ஹோட்டல்கள், விடுதிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை ரூ.887.35 ஆக இருந்தது. ஆனால் இன்று திடீரென அதன் விலை ரூ.1,148.25 ஆக உள்ளது.
இந்த விலை உயர்வால் சிறு வியாபாரிகள் முதல் ஹோட்டல் அதிபர்கள் வரை கடும் கலக்கத்தில் உள்ளனர். இந்த விலையைக் கொடுத்து சிலிண்டரை வாங்க முடியாதவர்கள், தைரியமாக வீடுகளுக்கு மானிய விலையில் தரப்படும் சிலிண்டர்களை கள்ள மார்க்கெட்டில் வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர்.
வரி கட்டுவோருக்கு தலையில் துண்டு:
தற்போது வீடுகளுக்கு 14.2 கிலோ எடையுள்ள ரூ.291.35க்கு தரப்படுகிறது.
இந் நிலையில் அதிக வருமானம் உள்ளவர்களுக்கு (அதாவது வருமான வரி கட்டுவோர்) வீட்டு உபயோகத்திற்கு தரப்படும் சிலிண்டர்களின் விலையை மேலும் ரூ.207 உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
5 கிலோ மினி சிலிண்டர்கள்:
மேலும் வணிக நிறுவனங்களுக்காக மத்திய அரசு 5 கிலோ எடையுள்ள சிறிய சிலிண்டர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் விலை ரூ.100க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications