தவறு செய்யும் அமைச்சர்கள் வீடு முன் போராடுவேன்-விஜயகாந்த்
சென்னை: தவறு செய்கின்ற அமைச்சர்கள், அதிகாரிகள் வீட்டுக்கு முன்பாக முற்றுகை போராட்டத்தை தேமுதிகவினர் நடத்த வேண்டும். அந்த போராட்டங்களில் நானும் கலந்து கொள்வேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணையும் விழாவில் அவர் பேசியதாவது,
3 லட்சம் படித்த இளைஞர்களுக்கு அரசு உதவி தொகை கொடுப்பதாக சொல்கிறார்கள். இதிலிருந்தே அந்த இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும் உண்மை தெரியவருகிறது.
3 கோடி பேருக்கு மேல் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பதால் இலவச வேட்டி, சேலை வழங்குவதாக அரசு கூறியுள்ளது. அப்படியானால் வறுமை ஒழியவில்லை என்று தானே அர்த்தம். இதனைச் சொன்னால் கோபம் வருகிறது.
இலவச கலர் டிவியை விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் போடுவோம் என்கிறார்கள். வறுமை இருப்பதால்தான் டிவியை விற்கிறார்கள். கிட்னியை விற்கிறார்கள்.
எனக்கு கட்சித் தொண்டர்கள்தான் பாதுகாப்பு. போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை. தேமுதிக தொண்டர்கள் போராட்ட குணம் உடையவர்கள். ஆனால் பிரச்சனைக்காக ஏழை மக்களை பாதிக்கக் கூடிய சாலை மறியல், பஸ் மறியல் போராட்டம் நடத்த மாட்டார்கள். அது தேவையும் இல்லை. அதனால் ஏழைகள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
தவறு செய்கின்ற அமைச்சர்கள், அதிகாரிகள் வீட்டுக்கு முன்பாக முற்றுகை போராட்டத்தை தேமுதிகவினர் நடத்த வேண்டும். அந்த போராட்டங்களில் நானும் கலந்து கொள்வேன் என்றார் விஜயகாந்த்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
தனித்து போட்டியிடுவேன் என கட்சி துவங்கிய நாளிலிருந்து நான் சொல்லி வருகிறேன். நான் தனித்து தான் போட்டியிடுவேன். மக்கள் பலமே என் பலம். தனித்து போட்டியிடுவோம் என ஏற்கனவே விட்ட சவாலில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். மக்களும், கடவுளும் தான் எங்கள் கூட்டணி.
நானும், காங்கிரசும் கூட்டு சேர்ந்தால் வலுவாக இருக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். திமுகவை விட்டு விட்டு காங்கிரஸ் போய் விடுமோ என கருணாநிதியை இந்த கருத்துக் கணிப்பு கவலைப்பட வைத்துள்ளது.
என்னை பொறுத்தவரை தேமுதிக எப்போதும் தனியாகத்தான் இருக்கும். மக்களுக்கு பழைய அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை. அவர்கள் மீது விரக்தியடைந்துள்ளனர். எனவே அவர்களுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன்.
ஜெயலலிதாவைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அவர் திடீரென்று என்னை குடிகாரன் என சொன்னதற்கு பதில் சொன்னேன். மற்றபடி எதிர்கட்சியில் இருக்கும் அவரை அவ்வப்போது விமர்சனம் செய்வது தேவையில்லை என நினைக்கிறேன்.
மத்திய அமைச்சர் அன்புமணி, திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சி இருக்கக் கூடாது என சொல்கிறார். எந்த கதாநாயகனும் புகை பிடித்தபடி போஸ் கொடுப்பதை விரும்பவில்லை. ஒரு படத்தின் இயக்குனர் விருப்பப்படி செயல்படுவதை ஓர் அமைச்சர் கட்டாயத்தின் பேரில் மாற்றுவது சரியல்ல.
எங்கள் கட்சியிலிருந்து நாங்கள் யாரையும் வெளியேற்றவுமில்லை. அவர்களாக வருகிறார்கள். அவர்களாகவே போகிறார்கள். நான் யாரையும் அழைக்கவில்லை. எனது ஆரம்பகால ரசிகர் மன்றங்களை நம்பித்தான் கட்சி ஆரம்பித்தேன் என்றார் விஜயகாந்த்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications