பெனாசிர்: மன்னிப்பு கேட்டது பாக். அரசு
இஸ்லாமாபாத்: பெனாசிர் படுகொலை தொடர்பாக உள்துறை அமைச்சகம் முன்பு தெரிவித்து கருத்துக்களுக்காக பாகிஸ்தான் அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. அதேசமயம், பெனாசிர் சுட்டுக் கொல்லப்படவில்லை என்ற தங்களது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறி மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது.
பெனாசிர் கொலை தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சீமா முதலில் அளித்த பேட்டியில், பெனாசிர் சுட்டுக் கொல்லப்படவில்லை. மனித குண்டுவெடிப்பிலும் பலியாகவில்லை. மாறாக, அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி அலை தாக்கி, வேகமாக கீழே குனிந்து தப்பிக்க முயன்றபோது காரின் மேற்கூரை இரும்புக் கம்பி தலையில் இடித்து அதனால் ஏற்பட்ட காயத்தால் இறந்தார் என்று கூறினார்.
ஆனால் அதன் பின்னர் வெளியான சில வீடியோ படக் காட்சிகள், பாகிஸ்தான் அரசின் கூற்று தவறு என்பதை நிரூபிப்பதாக அமைந்தது. மேலும் திங்கள்கிழமை வெளியான லேட்டஸ்ட் வீடியோ படத்தில், பெனாசிரை நோக்கி ஒரு மர்ம நபர் வெகு அருகே நின்று சுடுவதும், அந்தக் குண்டு பெனாசிரின் தலையில் பட்டு அவரது துப்பட்டா பறப்பதும், அதன் பின்னர் அவர் கீழே விழுவதும் தெளிவாகத் தெரிகிறது.
அதன் பின்னரே மனித வெடிகுண்டாக வந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்கிறார். மொத்தம் மூன்று குண்டுகள் சுடப்படுவதும் தெளிவாக தெரிய வருகிறது.
இந்த வீடியோ படக் காட்சியால் பாகிஸ்தான் அரசின் கூற்று பொய்யானது, தவறானது என்பது நிரூபணமானது. மேலும், பெனாசிர் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யத் தவறியது பாகிஸ்தான் அரசு செய்த மிகப் பெரிய தவறு என்று அமெரிக்காவும் தெரிவித்திருந்தது.
ஆனால் பாகிஸ்தான் அரசு தனது பாதுகாப்பு குளறுபடிகளை மூடி மறைப்பதற்காக பெனாசிர் கார் இரும்புக் கம்பி தலையில் பட்டு இறந்ததாக கூறியது.
ஆனால் பெனாசிர் குண்டடி பட்டுத்தான் இறந்தார் என்பதை நிரூபிக்கும் வீடியோ பட ஆதாரங்கள் வரிசையாக வெளியானதால் தனது தோல்வியை பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் நாளிதழ்களில் முதல் பக்கத்தில், டிவியில் ஒளிபரப்பானட கொலைகாரனின் படம், தலை துண்டிக்கப்பட்ட மனித வெடிகுண்டின் முகம் ஆகியவற்றுடன் ஒரு ளம்பரம் வெளியிடப்பட்டது.
அதில், இவர்கள் இருவரும் ராவல்பிண்டி தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள். இவர்களைப் பற்றி உறுதியான தகவல்களை தெரிவிப்போருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். தகவல் தெரிவிப்போரின் முழுவிவரமும் ரகசியமாக வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இடைக்கால உள்துறை அமைச்சர் ஹமித் நவாஸ் கான் செய்தியாளர்களை அழைத்து, பெனாசிர் கொலை தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கூறிய தகவலுக்காக, தவறுக்காக மன்னித்து விடுங்கள் என்று பகிரங்கமாக கேட்டுக் கொண்டார்.
மேலும், பாதுகாப்பு குளறுபடிகள் உள்ளிட்ட அனைத்துக்கும் மன்னிப்பு கேட்டுக் கொள்வாகவும் நவாஸ் கான் கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், நாங்கள் வெறும் சிப்பாய்கள் தான். பத்திரிகையாளர்களைப் போல சிந்திக்கும் திறன் கொண்டவர்கள் அல்ல. டிவி'யில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது. விரைவில் நல்ல திருப்பம் ஏற்படும்.
பெனாசிரின் தலையில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே மண்டை ஓட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சேதத்தை காட்டுகிறது. எதனால், அந்த சேதம் ஏற்பட்டது என்பது பற்றி அதில் தெரிவிக்கப்படவில்லை.
காரில் ஏறியதும், பெனசிர் மேற்கூரை வழியாக எழுந்து நிற்காமல் இருந்திருந்தால் எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டு இருக்காது. பெனசிரின் கார், துப்பாக்கி தோட்டாக்களாலோ, வெடிகுண்டுகளாலோ சேதம் அடையாது என்றார் நவாஸ்கான்.
இந்தப் பேட்டி வெளியான சில மணி நேரங்களில் மீண்டும் ஒரு பேட்டியை அளித்தார் கான். அதில், நாங்கள் சொன்ன வார்த்தைகளில் சில, மிகவும் கடுமையாக இருந்ததால், அதற்காக தான் மன்னிப்பு கேட்டோமே தவிர, எங்கள் நிலையில் மாற்றம் ஏதும் இல்லை. அதாவது பெனாசிர் துப்பாக்கியால் சுடப்பட்டுத்தான் இறந்தார் என்ற கருத்தில் மாற்றம் இல்லை என்று கூறி குட்டையைக் குழப்பியுள்ளார் நவாஸ் கான்.
ஐஎஸ்ஐ சதியை மறைக்க பெனாசிர் கொலை - சர்தாரி
இதற்கிடையே, பாகிஸ்தான் தேர்தலில் ஐஎஸ்ஐ நடத்தத் திட்டமிட்டிருந்த பெரும் சதி வேலைகள் குறித்து பெனாசிருக்குத் தெரிந்ததால், அதை அவர் வெளிப்படுத்தி விட்டால் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதால்தான் பெனாசிர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பெனாசிர் படுகொலையை அரசு திசை திருப்ப முயற்சிக்கிறது.
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் ஐஎஸ்ஐ மூலம் பல்வேறு சதிச் செயல்களை அரங்கேற்ற முஷாரப் அரசு திட்டமிட்டிருந்தது. இதுகுறித்த பல முக்கியத் தகவல்கள் பெனாசிருக்குத் தெரிய வந்தது.
இவற்றை அவர் வெளியிடவும் தயாராகி வந்தார். பெனாசிர் உண்மைகளை வெளியில் சொல்லி விட்டால் தனது ஆட்சிக்கும், தனக்கும் சிக்கல் ஏற்படும், தப்ப முடியாது என்பதாலதான் திட்டமிட்டு பெனாசிரைக் கொல்ல முஷாரப் அரசு முடிவு செய்து அதை அரங்கேற்றியுள்ளது.
எனவே, பெனசிரின் சாவுக்கு முஷாரப் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். பெனசிர் படுகொலையை தொடர்ந்து, இதற்கு காரணம் அல்-கொய்தாவும் தலிபானும் தான் என்று அவசரமாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
ஆனால் இரு அமைப்புகளுமே அதை மறுத்து விட்டன. இதனால் தினசரி ஒரு புதுக் கதையை முஷாரப் அரசு கூறி வருகிறது.
பெனாசிர் சுடப்பட்டு தான் கொல்லப்பட்டார் என்று முதல் நாளில் இருந்தே நான் கூறி வருகிறேன். இப்போது அருகில் இருந்து கைத்துப் பாக்கியால் சுடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பான ஆணித்தரமான வீடியோ ஆதாரமும் வெளியாகியுள்ளது.
எனவே பெனாசிர் கொலை தொடர்பாக சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்ய வேண்டும் என்றார் சர்தாரி.
தீவிரவாதிகளுக்கு அமெரிக்க நிதி:
இதற்கிடையே, பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா அளித்த நிதியுதவியை தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் அரசு பயன்படுத்தியது குறித்த பரபரரப்பு தகவல்களும் வெளியாகியுள்ளன. இதை அமெரிக்க அரசிடம் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்க பெனாசிர் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
தீவிரவாத ஒழிப்பில் முக்கிய பார்ட்னர் முஷாரப் என்று அமெரிக்க அதிபர் புஷ் வாய்க்கு வாய் கூறி வருகிறார். தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா பெருமளவில் உதவியும் அளித்து வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அள்ளிக் கொடுத்து வருகிறது.
ஆனால் அமெரிக்கா கொடுத்த பணத்தை ஒரு கையால் வாங்கி மறு கையால் தீவிரவாதிகளுக்கு அள்ளிக் கொடுத்துள்ளது பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோரி ரூபாய் நிதியை தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தாைர வார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான முக்கியத் தகவல்களும், ஆதாரங்களும் பெனாசிருக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அமெரிக்க அமைச்சர்களை சந்தித்து முஷாரப் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தவும் திட்டமிட்டிருந்தார்.
எனவே இந்தக் காரணத்திற்காகவும், பெனாசிர் கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது கட்சியினர் கூறுகின்றனர்.
இதற்கிடையே, பெனாசிர் மறைவைத் தொடர்ந்து அவரது கட்சிக்கு ஆரவு பெருகி வருகிறது. தேர்தல் நடந்தால் பெனாசிர் கட்சியும், நவாஸ் ஷெரீப் கட்சியும் மொத்த இடங்களையும் கைப்பற்றி விடும் நிலை உள்ளது.
எனவே தேர்தலை ஒத்திப் போட முஷாரப் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தலை ஒத்திப் போடக் கூடாது என்று பெனாசிர் மற்றும் நவாஸ் கட்சிகள் கோரி வருகின்றன.
இருப்பினும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது உறுதி. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications