திமுக, அதிமுக இல்லாத கூட்டணி அமைய வேண்டும்: சிபிஎம்

சென்னை: தமிழகத்தில், திமுக, அதிமுக இல்லாத புதிய கூட்டணிய உருவாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி எடுக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் வரதராஜன் பேசினார். அப்போது திமுக, அதிமுக இல்லாத புதிய கூட்டணியை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிக்கப் போவதாக அவர் கூறினார்.
மேலும், இந்தப் புதிய கூட்டணியில் விஜயகாந்த்தின் தேமுதிக, பாமக ஆகியவை இடம் பெறும் எனவும் அவர் கூறினார். வரதராஜனின் இந்த பேட்டி திமுக வட்டாரத்தில் அணலையும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் கிளப்பும் எனத் தெரிகிறது.
வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் விஜயகாந்த். மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
அதேசமயம், பொருளாதாரக் கொள்கைகள் குறித்த அவரது நிலை என்ன என்பதை இதுவரை அவர் தெளிவாக தெரிவிக்கவில்லை.
அதேபோல, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். பல போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.
இடதுசாரிகளின் கொள்ைககளை ஒத்து இந்த இரு கட்சிகளும் போராடி வருகின்றன. எனவே இவர்களின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்து, அதன் பின்னர் அவர்களுடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைப்பது குறித்து இடதுசாரிகள் முடிவு செய்வோம்.
மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது கூட்டணியை அமைக்க முயற்சி நடந்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் கூட்டணி அமைய வேண்டும். திமுக, அதிமுக இல்லாத கூட்டணி அமைய வேண்டும்.
திமுகவுடன் காலவரையற்ற உறவு எதையும் இடதுசாரிக் கட்சிகள் கொண்டிருக்கவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சேபிக்காது. இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம்தான் தீர்வு காண வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கோவையில் மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும்.
தேசிய அரசியல், அனைத்து முக்கியப் பிரச்சினைகள், அடுத்த லோக்சபா தேர்தலில் கட்சியின் நிலை உள்ளிட்டவை குறித்து அதில் விவாதிக்கப்படும்.
மேலும் இந்தக் கூட்டத்தில் தேசிய அளவிலான மூன்றாவது கூட்டணி குறித்தும் விவாதிக்கப்படும் என்றார் வரதராஜன்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications