மோடிக்கு கோவில் கட்டி கும்பிடும் பாம்பாட்டிகள்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் போஜ்பூரா கிராமத்தில், முதல்வர் நரேந்திர மோடிக்கு பாம்பாட்டிகள் சேர்ந்து கோவில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். அந்தக் கோவில் படு வேகமாக பிரபலமாகி வருகிறது.
குஜராத் மாநிலம் வானகனீர் மாவட்டத்தில் உள்ளது இந்த குக்கிராமம். இக்கிராமத்தில் 111 பாம்பாட்டி குடும்பங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறின. இவர்களின் தொழிலே பாம்பு பிடிப்பதுதான்.
ஆரம்பத்தில் இவர்கள் இந்தக் கிராமத்திற்கு வந்தபோது கூடாரம் போட்டுத்தான் தங்கியிருந்தனர். ஆனால் இது அவர்களுக்கு பெரும் சிரமமாக இருந்தது.
இதையடுத்து முதல்வர் நரேந்திர மோடியிடம் அவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.
முதல்வர் மோடியும், உடனடியாக பாம்பாட்டிகளின் குடும்பங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களுக்கு இலவச நிலம் வழங்கப்பட்டது. அதில் வீடுகளைக் கட்டவும் அரசே நிதியுதவி அளித்தது. இதுதவிர ஒரு பள்ளிக்கூடமும் கட்டித் தரப்பட்டது.
இதை சற்றும் எதிர்பார்க்காத பாம்பாட்டிகள் பெரும் வியப்படைந்தனர். மோடியின் தீவிர ஆதரவாளர்களாக மாறி விட்டனர்.
பாம்புகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பாம்பாட்டிகளின் குழந்தைகள் இன்று கம்ப்யூட்டரும், கையுமாக இருப்பதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்க்கின்றனர்.
மோடி தங்களுக்குச் செய்து கொடுத்த வசதிகளை மறக்காத பாம்பாட்டிகள் தற்போது அவருக்கு ஒரு கோவிலை ஏற்படுத்தியுள்ளனர். அதில் தினசரி மூன்று வேளை பூஜையும் செய்து அசத்துகின்றனர்.
இந்தக் கோவிலை விரைவில் பெரிய கோவிலாக்கவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு மோடிதான் கடவுள். அதனால்தான் கோவில் கட்டினோம் என்று கூறுகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications