சாக்கடை நீர் கலப்பால் நிறம் மாறும் கீழக்கரை கடல்
-கீழக்கரையிலிருந்து ஹமீது யாசின்
கீழக்கரை (ராமநாதபுரம்): ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடல் பகுதியில் சாக்கடை நீர் அதிக அளவில் திருப்பி விடப்பட்டு வருவதால் கடலின் நிறம் மாறி வருகிறது. இதனால் இப் பகுதியில் பெரும் சுற்றுச்சூழல் கேடு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் அழியும் அபாயமும் எழுந்துள்ளது.
கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் முடிவடைந்து விட்டன. ஆனால், இப்போதைக்கு கீழக்கரையின் அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் கழிவுநீர் கடலுக்குள் தான் திருப்பி விடப்பட்டு வருகிறது.
இதனால் கடல் மாசு படிந்து நிறம் மாறத் தொடங்கியுள்ளது. இது மீன்களையும் பாதித்துள்ளது. இந்த மீன்களை உண்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும் வரை கழிவுநீரைத் தேக்கி இயற்கை உரம் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(வாசகர்கள் உங்கள் பகுதி பிரச்சனைகளையும் நமக்கு அனுப்பலாம். அனுப்ப வேண்டிய இணைய தள முகவரி [email protected])
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications