இலங்கை பதட்டம்: இந்திய கடல் எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
மதுரை: இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலக முடிவெடுத்திருப்பதால் அங்கு போர் உக்கிரமடையும் என்பதால், இந்திய கடல் எல்லைப் பகுதியில் கடற்படையும், கடலோரக் காவல் படையும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை முகாம் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தென் கிழக்கு கடலோரப் பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படையும், கடற்படையும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு வெகு அருகில் ராமநாதபுரம் இருப்பதால், இப்பிராந்தியத்தில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டபம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள கடலோரக் காவல் படை முகாம்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன.
வழக்கமான ரோந்துப் பணிகள் தவிர வான் ரீதியாகவும், கடல் மார்க்கமாவும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அகதிகளின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
தமிழக மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சர்வதேச எல்லைப் பகுதியில், இரண்டு கப்பல்கள், இடை மறித்துத் தாக்கும் கப்பல்கள், ஹோவர்கிராப்டுகள் ஆகியவற்றை கடலோரக் காவல் பட நிலை நிறுத்தியுள்ளது என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications