தமிழகத்தில் 11 எம்.பி தொகுதிகளில் மாற்றம் - அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: தமிழ்நாட்டில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு மாற்றப்பட்ட 11 எம்.பி. தொகுதிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளும் 39 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. 1971ம் ஆண்டு முதல் இந்த தொகுதிகள் எதுவும் மாற்றப்படாமல் இருந்தன.
மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக தொகுதிகளை மாற்றி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து தொகுதிகள் மறு சீரமைப்பு தொடர்பான கருத்தாய்வுக் கூட்டங்கள் நடந்தன.
இதையடுத்து தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல், மக்கள் தொகைக்கேற்ப எல்லைகளை மட்டும் மாற்றி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பல தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பல பொதுத் தொகுதிகள் தனித் தொகுதிகளாக மாறியுள்ளன. பல தனித் தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தொகுதிகளில் 11 தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே இருந்த எம்.பி. தொகுதிகளான புதுக்கோட்டை, கோபிச்செட்டிபாளையம், திண்டிவனம், வந்தவாசி, திருப்பத்தூர், திருச்செங்கோடு, திருச்செந்தூர், செங்கல்பட்டு, சிவகாசி, பெரியகுளம் மற்றும் நாகர்கோவில் ஆகிய 11 தொகுதிகள் மாற்றப்பட்டுள்ளன.
இந்த தொகுதிகளுக்கு பதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், தேனி ஆகிய தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மறுசீரமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய தொகுதிகள் அடிப்படையில்தான் அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications