மார்ச் 3ல் பிளஸ்டூ - 27ல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு
சென்னை: மார்ச் 3ம் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்குகின்றன. மார்ச் 27ம் தேதி பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
பத்தாவது மற்றும் பிளஸ்டூ தேர்வுகளுக்கான கால அட்டவணையை தமிழக அரசின் தேர்வு இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் நேற்று (ஜனவரி 4) வெளியிட்டார்.
பிளஸ்டூ தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி 24ம் தேதி முடிகிறது. பத்தாவது வகுப்புத் தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிவடைகிறது.
ஓ.எஸ்.எல்.சி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் மார்ச் 25ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிவடைகின்றன.
பிளஸ்டூ தேர்வு கால அட்டவணை:
மார்ச் 3 - தமிழ் முதல் தாள்.
மார்ச் 4 - தமிழ் 2வது தாள்.
மார்ச் 5 - மனநலவியல், சுருக்கெழுத்து.
மார்ச் 6 - ஆங்கிலம் முதல் தாள்.
மார்ச் 7 - ஆங்கிலம் 2வது தாள்.
மார்ச் 8 - தட்டச்சு தமிழ், ஆங்கிலம்.
மார்ச் 10 - இயற்பியல், வணிகவியல்.
மார்ச் 11 - புவியியல்.
மார்ச் 12 - வர்த்தக கணிதம்.
மார்ச் 13 - வேதியியல்.
மார்ச் 14 - கணக்குப் பதிவியல்.
மார்ச் 15 - மனை அறிவியல், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, நர்சிங், நியூட்ரிஷன், டயட்டிக்ஸ்.
மார்ச் 17 - கணிதம், விலங்கியல்.
மார்ச் 18 - பொருளாதாரம், சித்த மருத்துவம்.
மார்ச் 19 - தொழில் பாடங்களுக்கான தேர்வுகள்.
மார்ச் 20 - உயிரியல், தாவரவியல், வரலாறு.
மார்ச் 22 - அரசியல் அறிவியல், அடிப்படை அறிவியல், இந்திய கலாச்சாரம்.
மார்ச் 24 - கம்ப்யூட்டர் அறிவியல், சிறப்பு தமிழ், கம்யூனிகேடிவ் ஆங்கிலம், புள்ளியியல்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை:
மார்ச் 27 - தமிழ் முதல் தாள்.
மார்ச் 28 - தமிழ் 2வது தாள்.
மார்ச் 31 - ஆங்கிலம் முதல் தாள்.
ஏப்ரல் 1 - ஆங்கிலம் 2வது தாள்.
ஏப்ரல் 4 - கணிதம்.
ஏப்ரல் 8 - அறிவியல்.
ஏப்ரல் 10 - சமூக அறிவியல்.
மெட்ரிகுலேஷன் தேர்வு கால அட்டவணை:
மார்ச் 25 - தமிழ் முதல் தாள்.
மார்ச் 26 - தமிழ் 2வது தாள்.
மார்ச் 27 - ஆங்கிலம் முதல் தாள்.
மார்ச் 28 - ஆங்கிலம் 2வது தாள்.
மார்ச் 31 - கணிதம் முதல் தாள்.
ஏப்ரல் 1 - கணிதம் 2வது தாள்.
ஏப்ரல் 3 - அறிவியல் முதல் தாள்.
ஏப்ரல் 4 - அறிவியல் 2வது தாள்.
ஏப்ரல் 8 - வரலாறு மற்றும் குடிமையியல்.
ஏப்ரல் 10 - புவியியல் மற்றும் பொருளாதாரம்.
ஓ.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை:
மார்ச் 25 - அரபி, சமஸ்கிருதம் மொழி தாள் 1
மார்ச் 27 - தமிழ்.
மார்ச் 29 - அரபி, சமஸ்கிருதம் மொழி தாள் 2
மார்ச் 31 - ஆங்கிலம் முதல் தாள்.
ஏப்ரல் 1 - ஆங்கிலம் 2வது தாள்.
ஏப்ரல் 4 - கணிதம்.
ஏப்ரல் 5 - அரபி சிறப்பு மொழி தாள், சமஸ்கிருதம் 3
ஏப்ரல் 8 - அறிவியல்.
ஏப்ரல் 10 - சமூக அறிவியல்.
ஆங்கிலோ இந்தியன் தேர்வு கால அட்டவணை:
மார்ச் 25 - மொழித் தாள்.
மார்ச் 27 - ஆங்கிலம் முதல் தாள்.
மார்ச் 28 - ஆங்கிலம் 2வது தாள்.
மார்ச் 31 - கணிதம் முதல் தாள்.
ஏப்ரல் 1 - கணிதம் 2வது தாள்.
ஏப்ரல் 3 - அறிவியல் முதல் தாள்.
ஏப்ரல் 4 - அறிவியல் 2வது தாள்.
ஏப்ரல் 8 - வரலாறு மற்றும் குடிமையியல்.
ஏப்ரல் 10 - புவியியல்.












Click it and Unblock the Notifications