துணை தாசில்தார் வீட்டில் ரெய்டு - ரூ. 48 லட்சம் ரொக்கம் சிக்கியது
காஞ்சிபுரம்: செங்கல்பட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், துணை தாசில்தார் வீட்டிலிருந்து ரூ. 48 லட்சம் ரொக்கம், ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கின.
செங்கல்பட்டு என்.ஜி.ஜி.ஓ. நகரில் துணை தாசில்தார் ரகுநாதன் என்பவரது வீடு உள்ளது. இவர் வருமானத்திற்கும் மீறிய வகையில் சொத்து குவித்து வருவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று (ஜனவரி 4) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரகுநாதன் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது ரகுநாதன் வீட்டில் இல்லை. ரெய்டு வரப் போவதை அறிந்து தலைமறைவாகி விட்டார்.
ரகுநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய சோதனையில் அவர்களே எதிர்பார்க்காத வகையில் பெரும் பணக் குவியல் சிக்கியது.
ரூ. 48 லட்சம் ரொக்கப் பணம் சோதனையில் சிக்கியது. இதுதவிர ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களுக்கான ஆவணங்களும் சிக்கின. இது போக, ரூ. 33.5 லட்சம் தொகைக்கான பிக்சட் டெபாசிட் குறித்த ஆவணங்களும் சிக்கின.
நேற்று முழுவதும் ரகுநாதன் வீட்டில் சோதனை நடந்தது. துணைதாசில்தார் வீட்டில் இந்த அளவுக்கு சொத்துப் பத்திரங்களும், பணமும் சிக்கியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் மிஸ்ரா இதுகுறித்துக் கூறுகையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ஊழல் கண்காணிப்புத் துறையிடமிருந்து விரிவான அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications