கடலில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் அழிப்பு
தூத்துக்குடி: கடலில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சரை அதிகாரிகள் ஆய்வு செய்து செயலிழக்க வைத்தனர்.
தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளில் மீனவர்களின் வலையில் அடிக்கடி ராக்கெட் லாஞ்சர்கள், வெடிமருந்து பெட்டிகள் என ஏதாவது சிக்குவது வழக்கமாகி வருகிறது.
இதே போன்று தூத்துக்குடி மாவட்டம், வேம்பர் சல்லி தீவு கடல் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் மீனவர்கள் வலையில் ராக்கெட் லாஞ்சர்கள் சிக்கின. இந்த ராக்கெட் லாஞ்சர்களை கைப்பற்றிய போலீசார் பாதுகாப்பாக தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் வெடிமருந்து கிட்டங்கியில் வைத்திருந்தனர்.
இந்த ராக்கெட் லாஞ்சரை சென்னையிலிருந்து வந்த ராணுவ லெப்டினட் கர்னல் விஜய் தவான், சந்திர சேகர நாயக் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அந்த ராக்கெட் லாஞ்சர் செயலிழக்கச் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications