மூன்றாவது அணியுடன் பிரகாஷ் காரத் சந்திப்பு
டெல்லி: மூன்றாவது அணியின் முக்கியத் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ் ஆகியோருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
மத்திய அரசுக்கு ஆதரவு தந்து அரசைக் காப்பாற்றி வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் மூன்றாவது அணியினருடன் ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பெரும் பரபரப்பாக உருவான இந்த மூன்றாவது அணி ஜெயலலிதாவின் உபயத்தால் ஆரம்பத்திலேயே கலகலத்துப் போனது. இந்த அணியின் தலைவர்களை நம்ப வைத்து கழுத்தறுத்த ஜெயலலிதா பாஜக பக்கமாய் நகர்ந்து வருகிறார்.
இதனால் இந்த அணியின் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டது. இந் நிலையில் இப்போது இந்த அணி மீண்டும் அரசியல் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் காரத்துடன் இந்த சந்திப்பு நடக்கிறது.
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் வலதுகரமான அமர்சிங் இடதுசாரிகளுடன் நல்ல தொடர்பில் இருந்து வருவபர். அவர் மூலமாகவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய சந்திப்புக்கான காரணம் ஏதும் கூறப்படவில்லை. ஆனாலும், விரைவிலேயே மத்திய காங்கிரஸ் கூட்டணிக்கு தந்து வரும் ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெறப் போவது மட்டும் நிச்சயம் என்று கூறப்படுகிறது. இதனால் இச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications