முழு பலத்தையும் விரைவில் காட்டுவோம்: விடுதலைப் புலிகள்
கொழும்பு: இலங்கைப் படைகளுக்கு எதிரான போர் மேலும் தீவிரமடையும். எங்களது முழு பலத்தையும் காட்டி இலங்கைப் படைகளை ஒடுக்குவோம். உலக நாடுகளுக்கும் எங்களது பலத்தைக் காட்டுவோம் என விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் சமீப காலமாக போர் உக்கிரமடைந்து வருகிறது. விடுதலைப் புலிகள் தரப்பில் பலர் பலியாகி வருகின்றனர். தமிழ்ச்செல்வன், கர்னல் சார்லஸ் என இரு பெரும் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விரைவில் முழு பலத்தையும் காட்டப் போவதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரும், அமைப்பின் முக்கிய சிந்தனையாளருமான கே.பாலகுமாரன், தமிழீழ தொலைக்காட்சியில் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுரித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் தங்களது முழு பலத்தையும் விரைவில் காட்டுவார்கள். அது ஒன்றுதான், இப்போது புலிகள் குறித்த குழப்பமான கருத்துக்களுக்கு முடிவு கட்டுவதாக அமையும். அப்போதுதான் சர்வதேச சமுதாயம் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்க முன்வரும்.
இந்தியா உள்பட உலக நாடுகள், இலங்கை பிரச்சினையில் எந்தவித முடிவையும் எடுக்காமல், பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை எடுக்காமல் உள்ளன. இனப் பிரச்சினை குறித்து சர்வதேச சமுதாயம் மெளனமாக இருக்கிறது. முடிவு எடுப்பதில் திணறுகின்றன, தயங்குகின்றன.
ஆனால் 2008ம் ஆண்டில் இந்த நிலை அகலும், எங்களது தடைகள் அகலும் என நம்புகிறோம்.
2003ல் எங்களை தீவிரவாதிகள் என்று உலக சமுதாயம் கூறியது போல இந்த ஆண்டு அவர்கள் எங்களை கூற மாட்டார்கள். இந்த ஆண்டில் இலங்கை இனப் பிரச்சினைக்கு தெளிவான ஒரு முடிவு ஏற்படும். அந்த முடிவை புலிகள் கொண்டு வருவார்கள் என்றார் பாலகுமாரன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications