தேசியக் கொடியை அவமதித்த வழக்கு - சானியாவுக்கு நோட்டீஸ்
போபாலைச் சேர்ந்த பிரஷாந்த் குமார் தாக்கூர் என்பவர் போபால் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், சானியா மிர்ஸா தேசியக் கொடிக்கு முன்பு தனது காலை காட்டுவது போல செய்தித் தாள்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் அவர் தேசியக் கொடியை அவமதித்துள்ளார். எனவே அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவரையும் இந்த வழக்கில் சேர்த்து கண்டிக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள், இதுபோல தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடக்காமல் இருக்க தேவையான உத்தரவை பிறப்பிக்குமாறு அய்யருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த போபால் தலைமை நீதித்துறை நடுவர் ஸ்ரீவத்சவா, சானியா மிர்ஸா இதற்கு மார்ச் 10ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அதேசமயம், இந்த வழக்கில் அமைச்சர் மணிசங்கர அய்யரை ஒரு பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்தார்.
ஹோபர்ட் போட்டியல் சானியா தோல்வி
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் சானியா மிர்ஸா தோல்வி அடைந்தார்.
இத்தாலி வீராங்கனை பிளேவியா பென்னட்டாவுடன் அவர் மோதினார். இப்போட்டியில், 5-7, 6-1, 3-6 என்ற செட் கணக்கில் சானியா தோல்வி அடைந்தார்.
இதன் மூலம் ஹோபர்ட் போட்டியிலிருந்தும் அவர் வெளியேறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?













Click it and Unblock the Notifications