மோடிக்கு விருந்து தருவதா? ஜெ.வுக்கு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விருந்து தருவதை கண்டித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, ஜனவரி 11ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து ஜமாத்தின் மாநிலச் செயலாளர் முகம்மது முனீர், பொருளாளர் அபூபக்கர் ஆகியோர் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மோடிக்கு விருந்து அளிக்கவுள்ளதன் மூலம் முஸ்லீம் சமுதாயத்தினரின் உணர்வுகளை ஜெயலலிதா புறக்கணித்து விட்டார், புண்படுத்தி விட்டார்.
விருந்துக்காக மோடி சென்னைக்கு 14ம் தேதி வரும் போது அதை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம். மேலும், மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விழிப்புணர்வு மாநாட்டை நடத்துவோம். 11ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றனர்.












Click it and Unblock the Notifications