அதிமுக - சிபிஐ மோதல் - ஒருவர் குத்திக் கொலை
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே அதிமுகவினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மாரச்சேரியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(43). இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. அப்போது கூட்டத்தில், மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் பக்கிரிசாமி, மாதவன் ஆகியோரும், செல்வராஜும், சமீபத்தில் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த முத்து (58) மற்றும் ஆறுமுகம்(35) ஆகியோரை விமர்சித்துப் பேசினர்.
இது முத்துவின் மகன் ரங்கசாமிக்குத் தெரிய வந்தது. அவரும், ஆறுமுகமும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடந்த இடத்திற்கு சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த மோதல் பின்னர் சண்டையாக மாறியது. இரு தரப்பினரும் கத்தி, கடப்பாரைகளை எடுத்து தாக்கிக் கொண்டனர். அதில், செல்வராஜ் கத்தியால் குத்தப்பட்டார். மாதவன், நாகராஜும் பலமாக தாக்கப்பட்டனர்.
அதிமுகவினர் தரப்பில் முத்து உள்ளிட்ட இருவருக்கு கத்திக் குத்து விழுந்தது. கத்திக் குத்துப்பட்ட செல்வராஜ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதனால் திருத்துறைப்பூண்டியில் பதட்டம் நிலவுகிறது. மோதல் மேலும் வலுக்காமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications