நோயாளி போல பிதற்றுகிறார் ராமதாஸ் - சேதுராமன்
மதுரை: குளிர் ஜுரம் வந்த நோயாளி போல பிதற்றுவது பாமக நிறுவனர் ராமதாசுக்கு வழக்கமான ஒன்று என மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சட்டசபைத் தேர்தல் நேரத்தில் குளிர் ஜுரம் கொண்ட நோயாளி போல பிதற்றுவது ராமதாசுக்கு புதிதல்ல, வழக்கமானதுதான்.
2001 தேர்தலில் புதுச்சேரியை பிடிப்பேன் என முழங்கினார். கடைசியில் காங்கிரசிடம் 2 சீட்டுக்களை கெஞ்சி கேட்டு வாங்கி போட்டியிட்டார். 2001ல் தமிழகத்தில் பாமக ஆட்சி என்றார். கடைசியில் அதிமுகவிடம் அமைதியாக சரண்டராகி விட்டார்.
2006ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் வழக்கமான வீரமுழக்கமிட்டவர் திமுகவிடம் கையேந்தி 31 தொகுதிகளை பெற்று 18ல் மட்டும் வெற்றி பெற்றார்.
ராமதாசுக்கு தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு என்று எதுவும் இல்லை. கூட்டணி செல்வாக்கை தன் செல்வாக்கு என்று கூறுவது ராமதாசுக்கு வழக்கமான ஒன்றாகும். அரசியல் பலமிழக்கும் நேரத்தில் தன்
பலத்தை கூட்டிக் காட்டுகிறார்.
சமூகநீதி பேரவை என்ற அமைப்பை தமிழகத்தில் உள்ள அனைத்து ஜாதி அமைப்புகளும் உருவாக்கின. அந்த அமைப்புக்கு ராமதாஸ் தலைவரானார். ஆனால் அந்த அமைப்பில் இருந்த எந்த ஜாதி சங்கத்தையும் ராமதாஸ் மதிக்கவே இல்லை.
தண்ணீரிலேயே தோன்றி தண்ணீரிலேயே வர்ணஜாலம் காட்டி மறையும் நீர்க்குமிழி போன்றவர் ராமதாஸ். 2011ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ் கூட்டணி உருவாக்கலாம்.
ஆனால் அந்தக் கூட்டணியில் சேர தமிழக அரசியல் கட்சிகள் எதுவும் முன்வராது. சமூக நீதி பேரவை, தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து நடந்து அரசியல் செல்வாக்கு பெற்றால் அது பாமகவுக்கு பெரும் ஆபத்து. அதனால் அதனை வளரவிடாமல் தடுத்தவர் ராமதாஸ் என தமிழக அரசியல் கட்சிகளுக்கு தெரியும் என்று கூறியுள்ளார் சேதுராமன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications