கலெக்டர் அலுவலகம் முன் ஒப்பாரி போராட்டம்
தூத்துக்குடி: போலீசார் கைது செய்த இருவப்பபுரம் பஞ்சாயத்து மீட்பு குழுவினரை விடுவிக்க கோரி அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் இருவப்பபுரம் பஞ்சாயத்து கடந்த 20-10-1964ல் சாயர்புரம் பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில் இருவப்பபுரத்தை மீண்டும் தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்று வழியுறுத்தி அதன் சுற்று வட்டார மக்கள் பஞ்சாயத்து மீட்பு குழுவை உருவாக்கினர்.
இதன் மூலம் கடந்த அக்டோபர் 2ம் தேதி முதல் இருவப்பபுரம்-சாயர்புரம் சாலையில் தினமும் ஒரு குடும்பத்தினர் என்ற அடிப்படையில் தொடர் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில் போராட்ட குழுவை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இருவப்பபுரம், மணக்காடு, பெருமையாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 200 பேர் மக்கள் உரிமை குழு தலைவர் வக்கீல் அதிசய குமார், மனித உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் ராமசந்திரன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பீட்டர் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். மேலும் அங்கு ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இந்த நூதனப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications